இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேற்றைய தினம் ஜனாதிபதி பதவியின் கடமைகளை நிறைவுசெய்து கொண்டார். இதன்போது அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவரது எதிர்கால நடவடிக்கைகள் முழுமையாக வெற்றிபெற தனது ஆசிர்வாதங்களையும் தெரிவித்தார்.
இதேவேளை அனைவருடனும் இணைந்து தாய் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் தனது பொறுப்புக்களை எதிர்காலத்திலும் நிறைவேற்றுவதற்கு உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

No comments: