News Just In

11/18/2019 08:34:00 AM

எரிவாயு குழாய் வெடித்து பங்களாதேஷில் 7 பேர் பலி, 25 பேர் காயம்

பங்களாதேஷின் தென்கிழக்குப் பிராந்தியத்திலுள்ள சிட்டாகொங்கின் புறநகரான பதார்காட்டாவில் ஞாயிற்றுக்கிழமை (18.11.2019) எரிவாயு குழாயொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 7 பேர் பலியானதுடன் மேலும் 25 பேர் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எரிவாயு குழாய் வெடித்தமைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. எரிவாயு இணைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் எனவும் பலியானவர்களில் சில பாதசாரிகள் இருக்கலாம் என குறித்த பகுதிக்கான பொலிஸ் அதிகாரி மெஹெடி ஹசன் தெரிவித்துள்ளார்.

குறித்த வெடிப்பின் பின்னர் ஐந்து மாடி கட்டிடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: