News Just In

11/21/2019 11:21:00 AM

திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் கைது


திருகோணமலை மாவட்டத்தின் ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 8 பேரை நேற்று (20) இரவு பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைது செய்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், ஜயந்திபுர, அக்போபுர மற்றும் மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் ஜயந்திபுர பகுதியிலுள்ள வீடு ஒன்றின் பின் பகுதியில் புதையல் தோண்ட வந்த நிலையிலே விசேட அதிரடைப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 8 சந்தேக நபர்களையும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய மண்வெட்டி, பிக்காஸ், அலவாங்கு, கூடைகள், இரும்புக் கூறுகள் மற்றும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய பூஜை பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களையும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் ஜயந்திபுர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதோடு ,பொலிஸார் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: