News Just In

10/25/2019 01:33:00 PM

T10 லீக் கிரிக்கெட் தொடரில் மேலும் மூன்று இலங்கை வீரர்கள்


ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கையைச் சேர்ந்த மேலும் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி நுவன் பிரதீப், செஹான் ஜயசூரிய மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்ட மேலதிக இலங்கை வீரர்களாக அமைகின்றனர்.

மூன்றாவது முறையாக இடம்பெறவுள்ள இந்த T10 லீக் கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலம் கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி நகரில் நடைபெற்றது. இந்த வீரர்கள் ஏலத்தில் இலங்கை T20 அணியின் தலைவர் லசித் மாலிங்க உள்ளிட்ட 7 இலங்கை வீரர்கள் தொடரில் பங்கெடுக்கும் அணிகளினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது இன்னும் மூன்று வீரர்கள் இந்த பட்டியலில் சேர, T10 லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக அதிகரித்திருக்கின்றது. எட்டு அணிகள் பங்குபெறவுள்ள T10 லீக் கிரிக்கெட் தொடர், நவம்பர் மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

No comments: