News Just In

10/25/2019 02:51:00 PM

வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பி.ப 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஆடுபட்டனர்.

வந்தாறுமூலை கிழக்குப்பல்கலைக்கழக வாளாகத்தின் முன் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தினை பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழி மாணவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

வாழ்க்கை செலவிற்கு ஏற்றாற் போல் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தி கைதுசெய்ததை எதிர்த்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கண்டனத்தை தெரிவித்து  மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் கலைந்து சென்றனர்.






No comments: