மட்டக்களப்பு சிவாநந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவானது இன்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலையின் அதிபர் T.யசோதரன் தலைமையில் பாடசாலையில் அமைந்துள்ள சுவாமி நடராஜானந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதான அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்வி அமைச்சின் பாடசாலை வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் Dr.U.G.Y அபேசுந்தர, கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுப் பிரிவின் பிரதம கணக்காளர் S.குலதீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் (நிருவாகம்) சிவாநந்தா பாடசாலையின் மேம்பாட்டு பொது இணைப்பாளருமான திருமதி.S.குலேந்திரகுமார், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக் கல்வி அதிகாரி K.ரகுகரன், சிவாநந்தா தேசிய பாடசாலையின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் T.குணராஜா, சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் P.ரவிசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவில் 2018ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள், க.பொ.த சாதாரண தரத்தில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த உயர் தரத்தில் பாடத்துறை ரீதியாக சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள், பாடசாலை மட்டத்தில் தரம் 03 தொடக்கம் உயர்தரம் வரை பாடரீதியாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் மற்றும் விளையாட்டுக்களில் திறமையினை வெளிக்காட்டிய மாணவர்கள் விருதுகள், பதக்கங்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த சிவாநந்தியனுக்கான விருதினை நாகராஜன் சொரூபன் பெற்றுக்கொண்டார்.
No comments: