தேர்தல் செயலகத்தில் இன்று (16.10.2019) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதிலளித்தார்.
பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தேர்தல் நடைபெற்ற மறுநாள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் ஆனால் இம்முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் தொகை அதிகரித்தமையினால் தேர்தல் தொடர்பான இறுதி முடிவினை அடுத்த நாள் வெளியிடுவது சிரமமானது எனவும் ஜனாதிபதித் தேர்தலின் சகல முடிவுகளையும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவிலேயே வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்பிட்டிய தேர்தலின் வாக்களிப்பு வீதம் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக தெரிவித்த அவர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 தொடக்கம் 85 சதவீதமாக அமையக்கூடும் எனவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் வாய்ப்பும் காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உறுதிப்படுத்தப்படாத தேர்தல் தொடர்பான முடிவுகளை சமூக ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments: