News Just In

10/16/2019 03:05:00 PM

ஆசிரியர்-அதிபர் சம்பள பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சரவையில் தீர்மானம்

இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (Closed) தரமுயர்த்தி பொருத்தமான சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பள கட்டமைப்பை வகுப்பதற்கு சில காலம் செல்லும் என்பதினால் இடைக்கால பரிந்துரையின் அடிப்படையில் இதற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் திர்மானித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவைகளை மூடிய சேவைகளாக (Closed) தரமுயர்த்துதல் மற்றும் பொருத்தமான சம்பள கட்டமைப்பொன்றை தயாரித்தல்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களில் சேவைக்கான நியாயமான சம்பள அளவை பெற்றுக் கொடுக்க முதற் கட்ட நடவடிக்கையாக ஆசிரியர் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்ரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

இருப்பினும் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சேவையை மூடிய சேவையாக தரமுயர்த்துவதற்கும் இந்த சேவைக்கான பொருத்தமான சம்பள கட்டமைப்பை தயாரிப்பதற்கு குறிப்பிடத்தக்க காலம் செல்வதுடன் இடைக்கால பரிந்துரையாக அரச துறை சம்பள மதிப்பீடு தொடர்பிலான விஷேட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் கல்வி அமைச்சின் சிபாரிசு மற்றும் பரிந்துரையில் உள்ளடக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இடைக்கால சம்பள பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பளம் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பிலான ஆணைக்குழுவின் சிபாரிசுகளை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments: