முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா உட்பட 6 பேரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்ரீ ரங்கா செலுத்தியதாக கூறப்படும் ஜீப் ரக வாகனம் செட்டிக் குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில் அமைச்சரவை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியமைக்கு மேலதிகமாக அதனை மறைக்க போலி ஆவணங்களை உருவாக்கியமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர் செய்து சந்தேக நபர்களாக பெயரிட்டு அவர்களிடம் மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
No comments: