மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தின் முறைப்பாட்டு பிரிவுக்கு இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக உதவி தெரிவத்தாட்சிஅலுவலர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 05 முறைப்பாடுகளும், ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 05 முறைப்பாடுகளும், காத்தான்குடி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 02 முறைப்பாடுகளும், வெல்லாவெளி பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் 02 முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாகனங்கள், சொத்துக்கள் தொடர்பான முறைப்பாடு, அரசஅலுவலர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் தனிநபர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முறைப்பாடு, நியமனம் மற்றும் இடமாற்றம் பதவிஉயர்வு சம்மந்தமான முறைப்பாடு, ஊடகங்களில் சில கட்சி சார்ந்த பிரச்சாரங்களை மாத்திரம் வெளியிடுவது தொடர்பான முறைப்பாடு, போஸ்டர், பனர், கட்டவுட்கள், வாகனங்களில் கட்சி சார்பான படங்களை காட்சிப்படுத்துவது தொடர்பான முறைப்பாடு, சட்டரீதியான அனுமதி இன்றி கூட்டங்கள் ஊர்வலங்கள் பேரணிகள் நடாத்தப்பட்டமை தொடர்பான முறைப்பாடு, சட்டவிரோத வைபவங்கள் ஏற்பாடு செய்து அதனூடாக பொருட்கள் ஏனையவற்றை விநியோகம் செய்வது தொடர்பான முறைப்பாடு ஆகிய முறைப்பாடுகள் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் முறைப்பாட்டுபிரிவில் பதிவாகியுள்ளது.
நீதியாகவும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மதித்து பின்பற்றி முறையான சட்டரீதியானஅனுமதியினை பெற்று கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்களை நடத்திகொள்ளலாம் எனவும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments: