களுதாவளைக் கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (08.10.2019) மாலை நீராடிக் கொண்டிருந்த போது கடலில் காணாமல் போன களுதாவளையைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்ற இளைஞர் இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிழந்த இளைஞர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் அகப்பட்டு காணாமல் போயிருந்தார்.
இந் நிலையில் இன்று வியாழக்கிழமை (10) மாலை கிரான்குளம் கடற்கரையில் சடலம் ஒன்றை அவதானித்த மீனவர்கள் பொலிசாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த சடலம் காணாமல் போன இளைஞருடையது என உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டது.


No comments: