(S.சதீஸ்)
சமுதாயத்தில் அதிகரித்து வரும் தற்கொலை முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலக உளநல ஆற்றுப்படுத்தல் உதவியாளர் ரி. வினோஜினி தெரிவித்தார்.
மட்டக்களப்பு பெண்கள் அபிவிருத்தி ஒன்றிய (Women Development Forum) இணைப்பாளர் சோமா சிவிசுப்பிரமணியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (08.10.2019) ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஆரையம்பதி விதாதா வள நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற மகளிருக்கான விழிப்பூட்டல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய உளநல ஆற்றுப்படுத்தல் உதவியாளர் ரி. வினோஜினி
தற்போதைய இயந்திரமய வாழ்க்கையோட்டத்தில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் பகிர்ந்து கொள்ளலுக்கான சந்தர்ப்பமின்றியே அநேகர் விரக்தியின் விளிம்புக்குச் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தார் .



No comments: