News Just In

10/11/2019 07:10:00 AM

சமூக இணையத்தளங்கள் பயன்படுத்தும் பெண்களுக்கான எச்சரிக்கை

தற்பொழுது சமூக இணையத்தளங்களில் பெண்கள் மத்தியில் இடம்பெற்றுவரும் Strong Gorgeous Woman சவால்கள் தொடர்பாக மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் குருவிட்டகே தெரிவிக்கையில் தற்பொழுது சமூக இணையத்தளங்களில் #Strong gorgeous woman என்ற ஒன்று தற்பொழுது வைரலாகியுள்ளது. இதனூடாக தமது புகைப்படத்தை பதிவிட முடியும். முகப்புத்தகங்களை பயன்படுத்தும் பெண்களே இதனை பெரும்பாலும் பயன் படுத்துகின்றனர்.

இதனை சிலர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்பதனால் இது தொடர்பில் பெண்கள் கூடுதலான அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: