News Just In

10/09/2019 12:05:00 PM

கடலில் நீராடிய களுதாவளையைச் சேர்ந்த இளைஞர் காணாமல் போயுள்ளார்

களுதாவளைக் கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை (08.10.2019) மாலை நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

களுதாவளை வன்னியார் வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சுந்தரலிங்கம் டிலான்ஷன் என்பவரே இவ்வாறு கடலில் காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவமானது செவ்வாய்க்கிழமை மாலை களுதாவளையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நண்பர்களாக இணைந்து கடற்கரைக்குச் சென்று கடலில் குளித்த போது இடம்பெற்றுள்ளது.
குளித்துக் கொண்டிருந்தபோது அருகில் நின்று குளித்துக் கொண்டிருந்த தமது நண்பர் கடல் அலையினால் அள்ளுண்டு போவதை சக நண்பர்கள் அவதானித்துள்ளதைத் தொடர்ந்து உடனடியாக அருகிலுள்ள கடற்படையினரிடம் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினரின் நீண்ட தேடுதலின் பின்னரும் இளைஞனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் காணாமல் போயுள்ள குறித்த இளைஞனை அவருடைய உறவினர்கள் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.

No comments: