News Just In

8/23/2025 07:42:00 PM

ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன்


ரணிலை கைதுசெய்து பிணை வழங்குவதை எதிர்த்தமையானது முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது : எம்.ஏ.சுமந்திரன்



பாரிய குற்றங்களுக்காக அரச தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எவரும் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆனால் நீதிமன்றில் முன்வைத்த குற்றத்துக்காக ரணில் விக்ரமசிங்கவை ஒரு வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்தமை என்பது, முறையான ஆலோசனை அற்றதாகவே தோன்றுகிறது என்றும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

No comments: