திருகோணமலை-அபயபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஜோஹான் ஜோசப் என்ற இளைஞர் புகையிரதம் மோதி செவ்வாய்க்கிழமை (08.10.2019) மாலை உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
பலியான இளைஞரின் மகன் புகையிரத தண்டவாளப் பாதைக்கு அருகில் சென்ற போது அவரைக் காப்பாற்ற இளைஞரின் மனைவி சென்றுள்ளார். தனது மகன் மற்றும் மனைவி இருவரையும் காப்பாற்ற சென்ற இளைஞர் ரயில் மோதியதால் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
No comments: