இன்று காலை 10.30 மணியளவில் கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இரு தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுஜன பெரமுனவுடன் சுதந்திர கட்சி நாளை கைச்சாத்திடும் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி சார்பாக தனித்து வேட்பாளரை களமிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: