News Just In

10/31/2019 08:30:00 AM

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாக சபை தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட கலாசார அதிகாரசபையின் புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்யும் கூட்டம் புதன்கிழமை (30) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்குஉதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேசசெயலாளர்கள், இஸ்லாமிய கலாசார உத்தியோகத்தர் செயினுலாப்தின், கலாசார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அரசாங்க அதிபர் மா.உதயகுமார் உரையாற்றுகையில் இந்த மாவட்டமானது பல் இன கலாசாரத்தினை கொண்ட மாவட்டமாகும். அந்த வகையில் நல்லதொரு கலாசார விழுமியங்களுக்கு ஊடாக நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் வகையில் இந்த மாவட்ட கலாசார சபை ஆக்கப்பட்டு சிறந்த கலாசார சமூகத்தினை கட்டியெழுப்புதல் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதன் நிறைவேற்று பணிப்பாளர் சபையின் தலைவராக பதவி வழியாகஅரசாங்கஅதிபர் இருப்பதுடன் உப தலைவராக ச.கணேசமூர்த்தியும், செயலாளராக வை.லோகிதராஜாவும், பொருளாளராக ந.துஜோகாந் ஆகியோர் ஏகமனதாக எவ்வித போட்டியும் இன்றி மாவட்ட கலாசார அதிகாரசபையின் நிர்வாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகமானது மூன்று ஆண்டுகள் கால ஆயுளைக் கொண்டிருக்கும். முன்பு இருந்த கலாசாரஅதிகார சபையானது 2016ம் ஆண்டு தெரிவானது அச்சபையானது ஆயுட்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய நிர்வாக சபையினை உருவாக்கி சிறப்பான கலாசார சேவையினை வழங்குவதற்கு ஏதுவாக உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: