
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (14) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா. சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்ததுடன்
அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்களங்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச சங்கங்களின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மண்முனை வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பலதரப்பட்ட பிரச்சினைகள் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
முக்கியமாக கழிவகற்றல் முகாமைத்துவம், முற்கூட்டிய நோய் எதிர்ப்பு நடவடிக்கைகள், வடிகால் அமைப்பு, வீதி அபிவிருத்தி, மீன் பிடி சார்ந்த சவால்கள் மற்றும் தீர்வுகள், போதைபொருள் கட்டுப்பாடும் விழிப்புணர்வும், கைத்தொழில் அபிவிருத்தி, கல்விச் செயத்திட்டங்கள் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டு தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.
No comments: