மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவின் கிரான்குளம் - மத்தி 150A கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நேசகுமாரன் யசோகரராஐ் (கி.ப.கழக முகாமைத்துவ உத்தியோகஸ்தர்) மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி A.C றிஸ்வான் முன்னிலையில் 11.10.2019 அன்று 3.20 மணியளவில் இலங்கைத் தீவு முழுவதற்குமான சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் மட்/கிரான்குளம் வி.ம.வித்தியாலய பழைய மாணவர் மன்ற செயலாளராகவும், வள்ளுவர் இளைஞர் கழக தலைவராகவும், மண்முனைப்பற்று இளைஞர் கழக தலைவராகவும், கதிரவன் விளையாட்டுக் கழக தலைவராகவும், மாவட்ட இளைஞர் சம்மேளன அமைப்பாளராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: