News Just In

10/14/2019 04:51:00 PM

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் 'விடியலைத் தேடுகின்ற விடிவெள்ளி ' விழிப்புணர்வு நாடகம்


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு உள நல உதவி நிலையத்தினால், சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள நாவற்காடு நாமகள் வித்தியாலயம், கன்னங்குடா மாகவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு 14ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு  உளநல உதவி நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தலைமையில் கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உளநல பிரிவு உத்தியோகத்தர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

உலக உளநல தினத்தை முன்னிட்டு  , உளநலம், மன அழுத்தம் பற்றிய விடயங்களை பிரதிபலிக்கும் 'விடியலைத் தேடுகின்ற விடிவெள்ளி ' எனும் விழிப்பூட்டல் நாடகம் இடம்பெற்றதுடன் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அவர்களால் உளநலம் தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்பட்டது.

பொதுவாக மாணவர்கள் எதிர்கால தலைவர்களாகவும், கல்விமான்களாகவும் வரக்கூடியவர்கள் இவ்வாறான மாணவர்கள் பல வழிகளிலும் மன அழுத்தங்களுக்கு முகம்கொடுக்கின்றனர். இந்த மன அழுத்தங்களிலுருந்து விடுபட்டு சிறந்த வாழ்வினை வாழ, தமது உள நல உதவி நிலையத்தின் ஊடாக இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளையும், ஆலோசனைகளையும் இலவசமாக செய்துவருவதாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் இதன்போது தெரிவித்தார்.








No comments: