News Just In

10/31/2019 06:59:00 PM

திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு

இன்று தபால் மூல வாக்களிப்பானது நாடு பூராகவும் நடைபெற்றது. திருகோணமலை மாவட்டத்திலும் தபால் மூல வாக்களிப்பு சுமுகமான முறையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் 14,175 பேர் தபால் மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 14,148 தபால் மூல வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. 27 அரச உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சேருவில தொகுதியில் 6,415 பேரும் திருகோணமலை தொகுதியில் 3,900 பேரும், மூதூர் தொகுதியில் 3,833 பேரும் தபால் மூலம் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.

இதன்படி, திருகோணமலை மாவட்ட கிண்ணியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பானது அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 116 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: