News Just In

10/06/2019 11:28:00 AM

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவு

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை இன்று நண்பகலுடன் நிறைவடைய உள்ளது. நாளை (07.10.2019) காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒக்டோபர் 05 ஆம் திகதி மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்கள் இன்று (06.10.2019) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிற்பகல் 2.00 மணிக்கு விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் போது வேட்புமனுத் தாக்கல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மேலதிக நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட உள்ளது.

No comments: