News Just In

10/06/2019 12:57:00 PM

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார் சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேட்புமனுவினை இன்று (06.10.2019) தாக்கல் செய்துள்ளார். வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரனுடனும் இணைந்தே எம்.கே.சிவாஜிலிங்கமும் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால எல்லை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

No comments: