News Just In

10/15/2019 11:29:00 AM

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் பொது உடன்படிக்கை கைச்சாத்து

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களினால் முன்னெடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக, கட்சிகளின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்ட பொது உடன்பாட்டில் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கையொப்பமிட்டிருக்கின்றன.

இந் நிகழ்வானது யாழ். பல்கலைக் கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ‘ப்றைட் இன்’ விடுதியில் திங்கட்கிழமை (14.10.2019) நடைபெற்றது.

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பொது உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: