News Just In

10/15/2019 01:48:00 PM

எடின்பரோ சர்வதேச விருதுத் திட்டத்தின் வடக்கு கிழக்கிற்கான அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கை எடின்பரோ சர்வதேச கோமகன் விருது திட்டம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய இளைஞர் விருதுகள் பிரிவு ஆகியவற்றின் தேசிய பணிப்பாளர் திஸ்ஸ சமரசிங்க தலைமையில் எடின்பரோ சர்வதேச கோமகன் விருதுத் திட்டத்தின் வடக்கு கிழக்கிற்கான இணைப்பு அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை (15.10.2019) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

திஸ்ஸ சமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், சிறப்பு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விருதுகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரொஷான் ஜயசேகர, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரஸ்மியா பானு, மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் கலாராணி, இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் M.I.M ரஷ்மி, எடின்பரோ சர்வதேச கோமகன் விருதுத் திட்டத்தின் வடக்கு கிழக்கிற்கான இணைப்பாளர் ந.கிஷோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் யுவதிகள் பாடசாலை கற்றலுடன் நின்றுவிடாமல் அவர்களது ஏனைய திறைமைகளை வெளிக்கொணரும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையினை வளர்த்துக்கொண்டு இவ் விருது நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்ற முடியும்.

இசை, நாடகம், நடனம், விளையாட்டுக்கள், பொதுநல சேவைகள், சாகச பயணங்கள் எனப் பல வகையான பிரிவுகளின் கீழ் இளைஞர்கள் விருது செயற்றிட்டத்தில் பங்குகொள்ளலாம்.

No comments: