News Just In

10/15/2019 10:34:00 AM

நாட்டின் நீர்மின் உற்பத்தி 50 சதவீதமாக உயர்வு

நாட்டின் நீர் மின் உற்பத்தி 50 சதவீதத்தினால் உயர்வடைந்திருப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக நாளொன்றிற்கான மின்சார பாவனை குறைவடைந்திருப்பதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல நீரேந்து நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. காஸல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 99 சதவீதமான உயர்வடைந்திருப்பதுடன், மவுஸாகல நீர்த்தேக்கம் 90 சதவீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கம் 94 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: