வடக்கிற்கு புதன்கிழமை (16.10.2019) விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டார்.
குழாந்தாய் வீடமைப்புத்திட்டம் மற்றும் செட்டிபுலம் சங்கானை பிரமந்தை வீதி புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பிரதேசத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினையும் பார்வையிட்டார்.
பன்னாலை கீரிமலை வீதி புனரமைப்பு வேலைகளை பார்வையிடுவதற்காக கீரிமலை நகுலேஸ்வர ஆலய முன்றலுக்கு விஜயம் செய்த பிரதமர் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதமகுருவை சந்தித்து கலந்துரையாடினார். நகுலேஸ்வர ஆலய புனரமைப்பு விடங்களிலும் பிரதமர் கவனம் செலுத்தினார். மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய வழிபாடுகளில் பிரதமர் கலந்துகொண்டார்.
No comments: