நிந்தவூர் மீராநகர் கடற்கரை பகுதியில் வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி ஞாயிற்றுக்கிழமை இரவு (06.10.2019) உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வன்னியார் வீதி நிந்தவூர் பகுதியை சேர்ந்த 73 வயதுடைய முகம்மது தம்பி மீராநூர் மீராலெப்பை என்பவரே தலையில் தாக்கப்பட்டதானால் உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபரின் சடலத்தை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டதைத் தொடர்ந்து அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.
வயோதிபரை தாக்கிய சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்
No comments: