News Just In

10/06/2019 05:57:00 PM

புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சாதனை



மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 78 பேர் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு மற்றும் ஏறாவூர்பற்று ஆகிய 3 கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.

அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி செல்வி அஜித்னா கேதீஸ்வரன் 182 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் முதலாவது இடத்தினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் இந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெறுவதற்கு காரணமாக இருந்த பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், ஆரம்பக் கல்வி பணிப்பாளர், உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி.M.தேவதாசன், திரு.S.ரவிச்சந்திரன், திரு.K.கோகுலதீபன், திரு.P.குமாரலிங்கம் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றார் மாணவர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

No comments: