கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்ற கடுகதி ரயிலுடன் லொறியொன்று மோதிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (29) கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கந்தளாய் பொலிஸார், தம்புள்ளையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற லொறி கந்தளாய் ரஜஎல ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில் ரயில் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
ரயில் பாதுகாப்பு கடவை உத்தியோகத்தர் கடமையில் இல்லாத சமயத்திலே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10/30/2019 10:29:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments: