தடம்புரண்ட மீனகயா என்ற ரயிலை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் இந்த ரயில் பாதையில் மாஹ வரையிலான ரயில் சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தடம்புரண்ட 6 ரயில் பெட்டிகளில் 3 பெட்டிகள் தற்பொழுது தண்டவாளத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. ரயில் என்ஜின் மற்றும் ஏனைய ரயில் பெட்டிகளை தண்டவாளத்திற்குள் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த பணிகளை இன்று பூர்த்தி செய்யகூடியதாக இருக்கும் என்று ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக இன்று இரவு மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ரயில் சேவைகளை வழமை நிலைக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (21) இரவு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மீனகயா என்ற நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் அவுக்கண என்ற இடத்தில் தடம்புரண்டது.
இதற்கு அமைவாக இன்று காலை 6.05 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி செல்விருந்த உதயதேவி என்ற கடுகதி ரயிலினதும், 6.10 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கோழும்பு கோட்டை வரையில் வரவிருந்த உதயதேவி என்ற கடுகதி ரயிலினதும் சேவைகள் இடம்பெறவில்லை.
No comments: