இலங்கையில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் பார்வையை இழந்த இலங்கைப் பெண் ஒருவர் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
உலகளாவிய ரீதியில் மற்றவர்களுக்கு முன்மாதிரியான மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களின் 2019ஆம் ஆண்டிற்கான பட்டியலிலேயே இலங்கையின் முன்னணி வடிவமைப்பாளர் நயன ஆச்சார்யா பீரிஸ் இடம்பிடித்துள்ளார்.
வங்கியில் பணிபுரிந்து வந்த அவர், 2000ஆம் ஆண்டு வீடு திரும்பும்போது குண்டுவெடிப்பில் சிக்கி தனது பார்வையை இழந்தார். இதனால் அவரது வேலையும் பறிபோனது.
எனினும் கடுமையான முயற்சியின் பலனாக ஆடை வடிவமைப்பாளராக மாறினார். அத்தோடு, அப் ரூ கம்மிங் ஃபேஷன் டிசைனர் போட்டியில் இறுதிப் போட்டிக்கும் முண்னேறியிருந்தார்.
தற்போது ஆடைத் தொழிற்சாலைகளில் ஆடைவடிமைப்பு, தன்னம்பிக்கை பேச்சாளராக நயன ஆச்சார்யா பீரிஸ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: