News Just In

10/10/2019 02:32:00 PM

வாக்காளர் அட்டை அச்சிடும் பணி ஆரம்பம்



ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணி அரச அச்சகத்தில் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம் முறை இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு  அவைமாக இம்முறை 8 வது ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பிற்கு அமைவாக வாக்களார்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 ஆகும். தேர்தல் நடைபெறவுள்ள தினத்திற்கு முன்னர் 10 நாட்களிற்கு முன்னராக இந்த வாக்காளர் அட்டைகள் அரசாங்க அச்சக பிரிவினால் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவேண்டும்.

விஷேட பாதுகாப்பிற்கு மத்தியில் இந்த பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கபட்ட மாதிரி வாக்காளர் அட்டைகள் ஒப்புநோக்கப்பட்டு அச்சிடும் பணிகள் அரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர்கள்; சிங்கள அகரவிரிசைக்கு அமைவாக வாக்காளர் அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments: