அம்பாறை - நவகிரியாவ பகுதியில் இன்று(10) இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற அரச பேருந்தும் தனியார் பேருந்தும் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தனியார் பேருந்து 40 அடி பள்ளத்தில் பாய்ந்ததால் அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: