News Just In

10/10/2019 01:11:00 PM

மட்டக்களப்பில் சர்வதேச உளநல தின நடைபவனி


ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினமான இன்று மட்டக்களப்பில் நடை பவனி நிகழ்வு இடம்பெற்றது.

"மாறிவரும் உலகில் இளைஞர்களுக்கான உளநலம்" எனும் தொனிப்பொருளில் நடைபவனியானது  மட்டக்களப்பு மாவட்டச் செலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டு தனியார் பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உளநல  துறை வைத்திய நிபுணர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உளநல துறை சார் உத்தியோகத்தர்கள் மற்றும் உளநலத்  துறை சார்ந்த அரசசார்பற்ற  நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நடைபவனி காந்திப் பூங்காவை வந்தடைந்ததைத் தொடர்ந்து அதிதிகளின் உரை, உளநலம் தொடர்பான கருத்துக்கள் அடங்கிய நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

















No comments: