மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் இன்று (15.10.2019) நியமிக்கப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த வைத்தியர் குணசிங்கம் சுகுணன் 2000ஆம் ஆண்டில் வைத்தியதுறையில் சேர்ந்தார். 2011 இல் வைத்திய நிருவாகத்துறையில் முதுமாணிப்பட்டம் பெற்ற இவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் எட்டு வருடங்கள் சிறப்பாக சேவையாற்றி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை A தரத்திற்கு தரமுயர்த்தப்படவும், தொடர்ச்சியாகப் தேசிய உற்பத்தித்திறன் விருதுகளை பெறவும் வழிவகுத்தார்.
2019ஆம் ஆண்டு வைத்திய கலாநிதி சுகுணன் அவர்கள் கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளராக பதவியேற்றுள்ளார்.
வாழ்த்துகள்
ReplyDelete