ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் ஒலி, ஔிபரப்பிற்கான நேரத்தில் வேறெந்த வேட்பாளரையும் ஆதரிப்பதற்காகப் பயன்படுத்துவற்கு இடமளிக்கப்படமாட்டாது எனவும் இது தொடர்பான நேர ஒதுக்கீடானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கு அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடாக உரைநிகழ்த்த 45 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் உரைகள் பதிவுசெய்யப்பட்டு பரிசோதித்த பின்னர் ஒலி, ஔிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உரையானது வேறொரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமைந்தால் அதனை ஒலி, ஔிபரப்பு செய்யாதிருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments: