News Just In

10/20/2019 08:46:00 AM

ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாய்மாருக்கு ஜனாதிபதி 20 லட்சம் ரூபா நிதியுதவி

ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக நிதி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் வெள்ளிக்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டத்தை பெற்றபோதிலும் அவர்களை வளர்த்தெடுப்பதில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் ஒன்பது குடும்பங்களுக்கு தலா 20 இலட்ச ரூபா வீதம் இதன்போது நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.

மேலும் கொஸ்வத்த தலாஹேன பிரதேசத்தில் வசிக்கும் மெனீஷா டென்வர் தம்பதிகளுக்கு 2012ஆம் ஆண்டில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக 25 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினையும் ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

No comments: