News Just In

8/14/2025 12:59:00 PM

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக, இன்று பதவிப்பிரமாணம் செய்யும் பேராசிரியர் தெ.சுந்தரேசன்

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராக, இன்று பதவிப்பிரமாணம் செய்யும் பேராசிரியர் தெ.சுந்தரேசன் 




சிவாநந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட முந்நாள் பீடாதிபதியும் , பொது மருத்துவத்துறை பேராசிரியருமாகிய தெட்சிணாமூர்த்தி சுந்தரேசன் அவர்கள் இன்று , கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வராகப் பதவிப்பிரமாணம் செய்கிறார். உயர்கல்வித் துறையில் , தேசிய ,சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட கல்விப் பணிகளை ஆற்றிவரும் பேராசிரியர் சுந்தரேசன் அவர்கள் , சிறந்த மனிதநேயப் பணியாளராக, பல சமூக மற்றும் ஆன்மீக அமைப்புகள் ஊடாக தனது பணிகளைச் செய்து வருகிறார். 



 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் இருதய சிகிச்சையினை இலவசமாகச் செய்துவரும் சஞ்சீவி வைத்தியசாலைப் பணிகளில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மருத்துவ சேவைக்கு அப்பால் ,சிறந்த கல்வியலாளராக திகழ்ந்து வரும் பேராசிரியர் சுந்தரேசன் அவர்கள், சிறந்த ஆய்வாளராகவும், சுமார் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். சமூக மேம்பாட்டின் பொருட்டு, பல செயலூக்க கருத்தரங்கங்களுக்கு வளவாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அறிவுப் பகிர்வின் அவசியத்தை உணர்ந்து சுமார் 30 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்களில் மருத்துவம் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார். ஒட்டுமொத்தத்தில், பல் பரிமாண ஆளுமையாளராக , தனது நேர்மையான பாதையில், கிழக்குப் பல்கலைக்கழக, திருகோணமலை வளாகத்திற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய அனைத்துத் தகமைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளவர். 

No comments: