News Just In

8/15/2025 07:48:00 PM

கிழக்கில் பிரசித்தி பெற்றபுனித மரியாள் பேராலயத்தின். வருடாந்த பெருவிழா இன்று கொடி இறக்கத்துடன் நிறைவு.

கிழக்கில் பிரசித்தி பெற்றபுனித மரியாள் பேராலயத்தின். வருடாந்த பெருவிழா இன்று கொடி இறக்கத்துடன் நிறைவு.


(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற. மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின். 217 ஆவது வருடாந்த பெருவிழா இன்று கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

இப்பேராலயத்தின் வருடாந்த பெருவிழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இப்பேராலயத்தின் பங்குத் தந்தை. வணக்கத்துக்குரிய லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளார் . தலைமையில் நவநாட்கிரியைகள் நடைபெற்றது.

இப் பெருவிழாவின் சிறப்பு நிகழ்வான. புனித மரியாள் அன்னை யின் திருச்சுருப பவனி . நேற்று மாலை. திருப்புகழ் மாலை நற் கரு ணை ஆசிர் என்பன நடைபெற்று. அதனைத் தொடர்ந்து பங்கு பேர வை யால் தீர்மானிக்கப்பட்ட நகரின் பல வீதிகளில் புனித மரி யன்னையின் திருச்சுருப பவனி இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து பெருவிழா கூட்டுத் திருப்பலி. இன்று. மட் டக்களப்பு மறை மாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதிவந்தனைக்குரிய. ஆயர். பி அன்டன் ரஞ்சித் ஆண்டகை தலை மையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.

பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுத்தலின் போது. நாட்டுக்கு நல் லாசி மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லுறவு மற்றும் கிறிஸ் தவ சமூகத்தின் ஈடேற்றம் வேண்டியும் விசேட பிரார்த்தனை வழி பாடுகளும் நடைபெற்றது.

இப்பெரு விழாவில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதி களை யும் சேர்ந்த பெருமளவு. கத்தோலிக்க பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஆலயத்தின் பங்குத்தந்தை. வணக்கத்துக்குரிய லெஸ்லி ஜெய காந்தன் தலைமையில். சிறப்புநிகழ்வான கொடி இறக்க நிகழ்வு கள். வட்டார மக்களின் பங்களிப்புடன் வெகு சிறப்பாக நடை பெற்றது

No comments: