மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
ஓட்டமாவடி காவத்தமுனையைச் சேர்ந்த புஹாரி முகம்மது அஹ்ஸன் ஸலாமி (21 வயது) என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று நாட்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
No comments: