இன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவு பெற்றது.
35 வேட்பாளர்களே வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன்படி ஆளும் கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார், கோட்டாபய ராஜபக்ச பிரதான எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதேவேளை கட்டுப்பணம் செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமல் ராஜபக்ச மற்றும் குமார் வெல்கம ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கவில்லை.
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: