News Just In

10/23/2019 05:33:00 PM

லொறி ஒன்றின் கொள்கலனில் 39 சடலங்கள் மீட்பு


லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த பொலிஸார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு லொறி ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த லொறியின் கொள்கலனின் உள்ளே இருந்து 39 சடலங்களை கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க லொறியின் ஓட்டுனரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஓட்டுனர் வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த கொள்கலனில் இறந்து கிடந்தவர்கள் யார்? அவர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி லண்டனுக்குள் நுழைய முயன்றவர்களா? அல்லது வேறு இடத்தில் கொல்லப்பட்ட பிணங்களா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.

No comments: