இன்றிரவு திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி புறப்படவிருந்த தபால் புகையிரதம் இரத்துச் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று மீனகயா கடுகதி தொடருந்தின் இயந்திரம் உள்ளிட்ட 6 தொடருந்து பெட்டிகள் அவுக்கன உப தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று தடம்புரண்டன.
இந்நிலையில், குறித்த தொடருந்து பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கைகள் இன்றும் நிறைவு பெறாத நிலையில் உள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் குறித்த தண்டவாளத்தில் புகையிரத சேவைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
No comments: