2019 கல்வி பொது தராதர சாதாரணதர நுண்கலை செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 1,295 மத்திய நிலையங்களில் நடைபெறும் இப் பரீட்சையில் 174,778 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர். சங்கீதம் (மேற்கத்தேய) பரீட்சை அடுத்த மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த பரீட்சை தொடர்பான அட்டவணை சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட பரீட்சாத்திகளுக்கான அனுமதிப்பத்திரம் அவர்களது விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரிட்சாத்திகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பரீட்டை அனுமதிப் பத்திரத்தில் பாடத்திருத்தம், மொழியில் மாற்றம் அல்லது வேறு ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் உடனடியாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிழைக்கு சமர்ப்பித்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
பரீட்சை அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறாத அதிபர்கள் தமது பாடசாலையின் பெயர், இலக்கம், முகவரி மற்றும் சம்மந்தப்பட்ட தகவல்களையும்;, தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது பெயர் மற்றும் முகவரி, பரீட்சை இலக்கம் மற்றும் நுண்கலைப்பாடம் தொடர்பான தகவல்களை பரீட்சை ஆணையாளர் நாயகம், பாடசாலை பரீட்சை பிரிவு மற்றும் பெறுபேறு கிளை, இலங்கை பரீட்சை திணைக்களம், தபால் பெட்டி இலக்கம் 1,503 என்ற முகவரிக்கு தபால் மூலமே அல்லது நேரடியாகவே அறிவிக்க வேண்டும்.
பாடசாலை அதிபர்களும், தனிப்பட்ட பரீட்சாத்திகளும் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: