News Just In

10/24/2019 02:35:00 PM

மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்று வீடு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி 3 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி !

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் 6ஆம் கட்டை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமுக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர். அத்துடன், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று அருகிலிருந்த மரம் ஒன்றுடன் மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர்களுள் 3 வயதுடைய குழந்தையும் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறையைச் சேர்ந்தவர்களான அவர்கள், மடு தேவாலயத்திற்கு யாத்திரை சென்று மீண்டும் திரும்பியபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: