News Just In

10/24/2019 05:46:00 PM

வர்த்தகத்தை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் மத்தியில் இலங்கை முன்னேற்றம்

இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நாடுகள் தொடர்பான உலக வங்கியின் சுட்டெண் தரப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் 190 நாடுகள் மத்தியில் இலங்கை 99 ஆவது இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் இலங்கை 100 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தது. தெற்காசிய நாடுகள் மத்தியில் இந்த சுட்டெண்ணில் இந்தியா 68 ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்த பட்டியலில் நியூஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளது.

வர்த்தகத்தை ஆரம்பித்தல், மின்சாரத்தை பெற்றுக்கொள்ளுதல், வர்த்தக பதிவு, கடனை பெற்றுக்கொள்ளுதல், வரி செலுத்துதல் உள்ளிட்ட 10 விடயங்களை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த மதிப்பீடு உலக வங்கியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments: