யாழ்ப்பாணம் பாலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிர்மானப்பணிகள் இடம்பெற்றுவரும் பலாலி விமான நிலையத்தை பார்வையிடுவதற்காக அங்கு சென்ற போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ரகவனுடன் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி திறக்கப்படும் என்று ஆளுநரிடம் அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் முதலாவதாக இந்தியாவுடனான விமான சேவைகள் இடம்பெறவுள்ளது.
No comments: