யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் 15 கிலோ எடையுடைய இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டடுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையின் சேருநுவர பகுதியில், 36 வயதுடைய விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஆயுதங்களுடன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார், அதன் பின்னர் அவரது மனைவி மற்றும் சகோதரி கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய கோண்டாவில் பகுதியில் உள்ள காணியொன்றில் இந்த இரண்டு கிளைமோர் குண்டுகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: